தமிழக செய்திகள்

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.