தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் சதம்- அதிகபட்சம் சென்னையில்..!

மதுரை நகரம் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 11 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், கடலூர் 103.82, நாகை 103.28, வேலூர் 103.1, மதுரை நகரம் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

திருத்தணி 102.38, தொண்டி, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை 102.02, மதுரை விமான நிலையம் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்படம் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி 102.74, காரைக்கால் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.