முரசு புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் முரசு புயலானது சென்னைக்கு கிழக்கே - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் நெல்லூரிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவில் முரசு புயல் உள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
புயல் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும். முரசு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முரசு புயலால் சென்னை மற்றும் திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், முரசு புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ராஜமுந்திரி, விஜயவாடா, கடப்பா, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் மற்றும் சென்னைக்கு விஜயவாடா, கடப்பா, ராஜமுந்திரி, திருச்சியில் இருந்து வரக்கூடிய விமானங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.