தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்பரலில் நடைபெறும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிகல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் நாளை வெளியிடுகிறார்
12-ஆம் வகுப்புகளைப் பொறுத்த வரையில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல் மற்றும் பல்வேறு தொழிற்கல்விப் பாடங்கள் உள்ளடங்கலாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தேர்வு அட்டவணை வெளியான பிறகு, முழுமையான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறை தேர்வு விவரங்களை பள்ளி கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது