தமிழக செய்திகள்

ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

கஞ்சா விற்பனை மூலம் ஈட்டப்பட்ட 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

அதன்பேரில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆவடி துணை கமிஷனர் பெரோஸ் அப்துல் கான் தலைமையில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஆவடி அம்பத்தூர் திருநின்றவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

ரகசிய தகவலின்படி ஆவடி ஜே.பி.எஸ் எஸ்டேட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, ஆவடி ஜே.பி.எஸ் எஸ்டேட் பகுதியில் பெருமளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை போதை பிரிவு தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனை மூலம் ஈட்டப்பட்ட 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இதில் அயப்பாக்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர்.

இது தொடர்பாக, அயப்பாக்கம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த தயாளன், கோபி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.