தமிழ்நாடு செய்திகள்

5 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.56 டிகிரி வெப்பம் பதிவு

ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.

மாலை மலர்

தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

திருத்தணி - 102.38, கரூர் பரமத்தி - 102.2, வேலூர் - 101.66, நாமக்கல் - 100.4, சென்னை மீனம்பாக்கம் - 96.8, கோயம்புத்தூர் - 96.26 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 69.98, ஊட்டி - 73.76, வால்பாறை - 78.8