தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இதுகுறித்து ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால் அது கிழக்கு பகுதியில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதனால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தி மலைப்பகுதியில் ஒரே நாளில் 820 மி.மீட்டர் மழை பெய்தது. தற்போது உருவாக உள்ள புயல் சின்னம் 2009-ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக இருக்கிறது. அது ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்பதால் கேரளா, தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் தமிழகத்தில் மலைப்பிரதேச பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அவசியம்.