தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.