செய்திகள்

ஆசிய போட்டியில் அசத்திய தருண் அய்யாசாமிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ஊக்கத்தொகையாக 30 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

ஆசிய போட்டியில் வென்று பதக்கம் பெற்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.