புதுடெல்லி:
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக விவசாயிகள் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.