செய்திகள்

ஜெயா டி.வி.யை கைப்பற்றவே ஐ.டி ரெய்டு: மாநில அரசு மீது பாயும் நாஞ்சில் சம்பத்

ஜெய டி.வி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயா.டி.வியை கைப்பற்றவே சோதனை நடப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், வருமான வரித்துறை சோதனையில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஜெயா டி.வி.யை கைப்பற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் வேலை என குற்றம் சாட்டியுள்ளார்.