செய்திகள்

கோவையில் பேருந்து நிலைய விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி உத்தரவு

கோயம்புத்தூரில் உள்ள சோமனூரில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகிலுள்ள சோமனூரில் உள்ள பேருந்து நிலைய மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பேருந்து நிலையத்தின் தூண் மீது நகர பேருந்து மோதியதில் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை உள்துறை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். மேலும் விபத்தில் காயடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT