தமிழகத்தில் 2018-ம் ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே இதுவரை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த கல்வி ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. மேலும், 2018-ம் ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தயார்செய்யும் வகையில் பொதுத்தேர்வு கால அட்டவணையும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் அரசு தேர்வுத்துறை இப்போதே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:-
மார்ச் 1-ந்தேதி - தமிழ் முதல் தாள்.
2-ந்தேதி - தமிழ் இரண்டாம் தாள்.
5-ந்தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
6-ந்தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
9-ந்தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
12-ந்தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ்
15-ந்தேதி - அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.
19-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்.
26-ந்தேதி - வேதியியல், கணக்கு பதிவியல்.
ஏப்ரல் 2-ந்தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.
6-ந்தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.
பிளஸ்-1 பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:-
மார்ச் 7-ந்தேதி - தமிழ் முதல் தாள்.
8-ந்தேதி - தமிழ் இரண்டாம் தாள்.
13-ந்தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
14-ந்தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
20-ந்தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ்.
23-ந்தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
27-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்.
ஏப்ரல் 3-ந்தேதி - வேதியியல், கணக்கு பதிவியல்.
9-ந்தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.
13-ந்தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்.
16-ந்தேதி - அனைத்து தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வருமாறு:-
மார்ச் 16-ந்தேதி - தமிழ் முதல் தாள்.
21-ந்தேதி - தமிழ் இரண்டாம் தாள்.
28-ந்தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
ஏப்ரல் 4-ந்தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
10-ந்தேதி - கணிதம்.
12-ந்தேதி - மொழி விருப்பப்பாடம்.
17-ந்தேதி - அறிவியல்.
20-ந்தேதி - சமூக அறிவியல்.
தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணிக்கு முடிவடைகிறது.