கொசு 
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் தாக்கம் கண்டுபிடிப்பு

கான்பூரில் சந்தேகத்திற்குரிய 20 பேரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாலை மலர்

கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டபோது கேரளாவில் ஜிகா வைரஸ் பரவலும் காணப்பட்டது. கேரள சுகாதாரத்துறை கடுமையாக போராடி ஜிகா வைரசை கட்டுப்படுத்தியது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் முதல் முதலாக ஒருவருக்கு ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை நோய் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவரது ரத்தம் புனேயில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

அந்த அதிகாரியின் உடலில் பல்வேறு நோயின் அறிகுறிகள் இருந்ததால் எத்தகைய வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த அதிகாரிக்கு ஜிகா வைரஸ் தாக்கம் இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர்.

கான்பூரில் சந்தேகத்திற்குரிய 20 பேரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுக்கு பிறகே ஜிகா வைரஸ் கான்பூரில் பரவி இருக்கிறதா என்பது தெரிய வரும்.