பல்லடம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கொத்த கோட்டை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் குமரேசன் (வயது 31). இவர் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடு புரத்தில் தனியார் நூற்பாலையில் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு அறைக்கு திரும்பினார். பின்னர் அடுத்த நாள் வேலைக்கு வராததால் தொழிலாளி ஒருவர் அவரை தேடி விடுதிக்கு சென்றார். கதவு பூட்டி இருந்தது. கதவை தட்டியும் குமரேசன் திறக்காததால் ஜன்னல் வழியே எட்டி பார்த்தார்.
அப்போது விடுதியின் கூரையில் உள்ள இரும்புக் கம்பியில் தூக்கு போட்ட நிலையில் குமரேசன் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரேசனுக்கு சங்கீதா (27) என்ற மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளது குறிப்பிடதக்கது.