விஷம் 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

ஒரத்தநாடு அருகே கடந்த சில மாதங்களாக மனவிரக்தியுடன் இருந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த சில மாதங்களாக மன விரக்தியுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.