தற்கொலை 
செய்திகள்

முத்துப்பேட்டை அருகே பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் விக்னேஷ் (வயது 25). இவர் ஊர் சுற்றிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் விக்னேசை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த விக்னேஷ் கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர் ரவிக்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.