தற்கொலை 
செய்திகள்

மதுக்கூர் அருகே வாலிபர் தற்கொலை

பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுக்கூர்:

பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே அத்திவெட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் ஆதிராஜன் (வயது 24). சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டு படித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அத்திவெட்டிக்கு வந்தார். சில தினங்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திடீரென்று எலி பேஸ்ட் சாப்பிட்டார். அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் திருச்சி கே.எம்.சி.யில் சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அத்திவெட்டி தெற்கு தெரு ராமசாமி (50) என்பவர் மதுக்கூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.