கொலை 
செய்திகள்

தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் கொலை

தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள மொட்டைகோபுரம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை சிதைந்த நிலையிலும், பீர்பாட்டில் உடைந்தும் கிடந்தது.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் கல் மற்றும் பீர்பாட்டில்கள் உடைந்து கிடந்தது. இதனால் குடிபோதையில் அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரும் அவரை கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.