விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.