கைது 
செய்திகள்

கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

கோவையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

கோவை:

கோவை மேட்டுப்பாளையம் ரோடு முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வெளியே யாரும் இல்லாததை அறிந்த வாலிபர் ஒருவர் பாத்ரூம் கதவின் இடுக்கு வழியாக அந்தப்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த இளம்பெண் நடந்தவற்றை தனது கணவரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் சாயிபாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.