கோப்புபடம் 
செய்திகள்

தா.பேட்டை அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தா.பேட்டை அருகே திருமணம் செய்ய பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மாணவியை மீட்டனா்.

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் பகுதியை சோ்ந்த 17 வயதுடைய மாணவி திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள். கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பூரில் இவருடைய தந்தைக்கு வேலை இல்லாததால், அவர் தனது மகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். 

இந்தநிலையில் வீட்டில் இருந்த மாணவி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 19) என்பவர் மாணவியை திருமணம் செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜீவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மாணவியை மீட்டனா்.

SCROLL FOR NEXT