நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 54). இவருக்கும் அந்த பகுதியை 2 பெண்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் பெண்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அய்யப்பன், அரிவாளுடன் முத்துவேல் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினார்.
இதில் முத்துவேலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி, மறுகால் குறிச்சியைச் சேர்ந்த அய்யப்பன், செல்வி, ஆறுமுகம் அம்மாள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அரிவாளால் வெட்டிய அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.