மரணம் 
செய்திகள்

திருப்பாலைக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மர்மமரணம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே உள்ள மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் ஆர்த்தி (வயது23).

இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தூங்க சென்றவர், மறுநாள் காலை வெகுநேரமாகியும் அறை கதவை திறக்கவில்லை. கதவை திறந்து பார்த்தபோது ஆர்த்தி உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சகோதரர் அஜய்கணேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.