இளம்பெண் கடத்தல் 
செய்திகள்

தியாகதுருகம் அருகே இளம்பெண் கடத்தல்

தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகிறார்கள்.

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவத்தன்று இரவு வீ்ட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகிறார்கள்.