தற்கொலை 
செய்திகள்

வாலாஜா அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

வாலாஜா அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

வாலாஜா:

வாலாஜாவை அடுத்த விசி.மோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், மெக்கானிக் இவரது மனைவி ஆரவள்ளி (வயது 22) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ராஜேஷ் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் ஆரவள்ளி யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரவள்ளி திருமணமாகி 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறாா்.