தற்கொலை 
செய்திகள்

திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கண்ணகி (வயது 29). இந்த தம்பதியினருக்கு ரோகித் (10), ரஞ்சித் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கண்ணகி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கண்ணகிக்கு மீண்டும் தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் தாங்க முடியாத அவர், வீட்டின் அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.