அனுப்பர்பாளையம்:
திருப்பூர் பாண்டியன் நகரை அடுத்த அண்ணா நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 54). இவருடைய மனைவி மாடத்தி (52). பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செல்வமணி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த செல்வமணி வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்வமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.