உயிரிழப்பு 
செய்திகள்

வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்கரப்பன் (வயது50). விவசாய தொழிலாளி. இவர் நேற்று அருகே உள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் அழகு புத்திர அய்யனார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் சக்கரப்பன் தவறி விழுந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி தேடினா். அப்போது சக்கரப்பன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சக்கரப்பனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.