விபத்து பலி 
செய்திகள்

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கீரனூர்:

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 83). இவர் கீரனூரை அடுத்த குளத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு பஸ்சில் சென்று புறவழிச் சாலைக்கு வந்தார். அங்கு உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அடுத்தடுத்து வந்த வாகனங்களும் அவர்மீது போது சென்றதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் ஜெயராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.