புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே மகளிர் காங்கிரசார் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டதுடன், பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், பிரதமர் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு கைதுசெய்து அழைத்துச் சென்றனர். கைதான பெண் நிர்வாகிகள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்