வழக்கு பதிவு 
செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்- அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் சமுத்திர பாண்டி என்ற பாண்டி (வயது 50).

இவர் வள்ளியூர் யூனியன் 3-வது வார்டு கவுன்சிலர் பகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

சம்பவத்தன்று இரவு அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை இவர் தட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சமுத்திர பாண்டி, பாலகிருஷ்ணனின் மனைவியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனே அந்த பெண் வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சமுத்திர பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.