தற்கொலை 
செய்திகள்

பாகூரில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

பாகூரில் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

பாகூர்:

பாகூர் மேரி வீதி கன்னியக்கோவில் சாலையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 59). இவர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர். இவரது மனைவி கல்யாணி (56). கை, கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு சென்றும் மூட்டுவலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த கல்யாணி, நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டு கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கல்யாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருமாள் கொடுத்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.