உயிரிழப்பு 
செய்திகள்

நெல்லை அருகே தனியாக வசித்த பெண் மர்ம மரணம்

நெல்லை அருகே தனியாக வசித்த பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை அடுத்த ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது 40). தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திமதி படுகாயங்களுடன் வீட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவருக்கு எப்படி பலத்த காயம் ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. இதனால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக அவரது உறவினர் கண்டியப்பேரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம் அடைந்து இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.