அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.
குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.
இந்த வன்முறையின் போது நூற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். சிலர் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் எடுத்து சென்றனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் எஃப்பிஐ அமைப்பு (அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு) பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ரிலே ஜூன் வில்லியம்ஸ் என்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜூன் வில்லியம்ஸ் தான் நான்சி பெலோசியின் அறையில் இருந்த லேப்டாப் கம்ப்யூட்டரை திருடியதாக எஃப்பிஐ அமைப்பால் குற்றம்சுமத்தப்படுகிறது.
தற்போது ஜூன் வில்லியம்ஸ் பென்சில்வேனியாவில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாகவும், அவரை தேடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.