வழக்கு 
செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை- விடுதி மேலாளர் மீது வழக்கு

காலாப்பட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி மேலாளர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

காலாப்பட்டு:

புதுச்சேரி சின்ன காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் விழுப்புரம் மாவட்டம் கொடூர் கிராமத்தை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். 

இந்தநிலையில் அந்த விடுதியின் மேலாளரான லோக்சந்தர் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லோக்சந்தர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.