கோப்புபடம் 
செய்திகள்

பாலக்கோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

பாலக்கோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் பேளாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த பச்சியம்மாள் (வயது 33) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.