மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பூர்:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர், வண்ணாரப்பேட்டை ராமானுஜம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் வண்ணாரப்பேட்டை சீனிவாசன் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (50) வேலை செய்து வந்தார்.

வெங்கடேசன், ஓட்டலுக்கு வெளியே இருந்த பாத்திரங்களை உள்ளே கொண்டுவந்து வைக்கும் போது திடீரென கால் தவறி விழுந்தார். அப்போது அங்கிருந்த மின்சார ‘சுவிட்ச் போர்டை’ கையால் பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் ராஜேந்திரனிடம் விசாரித்து வருகின்றனர்.