கோப்பு படம். 
செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

பாவூர்சத்திரம்:

இந்த வேலையில் ஆவுடையானுர், சிதம்பரநாடார் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ரத்தினசாமி (வயது 42) மற்றும் ஆவுடையானுர் இந்திராநகரை சேர்ந்த சரவணன் (48) ஈடுபட்டிருந்தனர். அப்போது சுவர் திடீரென இவர்கள் மீது சரிந்து விழுந்தது.

இதில் ரத்தினசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சரவணன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.