நாட்டில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளுக்கும், 29 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் நந்த் குமார் சிங் சவுகான் மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியின் மக்களவை உறுப்பினர் மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்தனர்.
இதையடுத்து, காலியாக உள்ள இந்த மூன்று மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதேபோல், பல்வேறு காரணங்களால் காலியாக இருக்கும் பீகார், அசாம், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 3 மக்களவை தொகுதி மற்றும் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது.
இதேபோல், பீகார், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.
தேர்தலை முன்னிட்டு கொரோனா நெறிமுறைகளுடன், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இதன் வாக்கு எண்ணிக்கை வரும் நவம்பர் 2ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... உருமாறிய புதிய கொரோனா பரவிய நாடுகள்- அதிர்ச்சி தகவல்