சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விடுதலைக்காகத் தனது சொத்து சுகங்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து, இரட்டை ஆயுள் தண்டனையான தீவாந்திர சிறைத் தண்டனை அனுபவித்து, சிறையில் ‘செக்கிழுத்தத் தியாகச் செம்மல்’ கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழா மிகச்சிறந்த முறையில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் நடந்த சுதந்திரத் தின விழாவின்போது அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நாளைய தினம் (5-ந் தேதி) காலை 10 மணியளவில், சென்னை ராஜாஜி சாலையில் துறைமுக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டியத் தமிழன் வ.உ. சிதம்பரனார் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.