மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மேற்கூரை தீப்பிடித்ததை அறிந்து, விஜயதரணி எம்.எல்.ஏ. பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று கோவில் மேற்கூரையை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விபத்து குறித்து கேட்டு அறிந்து கொண்டதோடு, நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் கோவிலின் முன்பக்கத்தில் அவர் அதிகாரிகளிடம் பேசும் படங்களை சமூக வலைதளங்களில் போட்டு, கோவிலுக்குள் காலில் செருப்புடன் நிற்பதாக அவதூறு பரப்பி உள்ளனர். சமூக வலைதளத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. புகார் மனு அளித்துள்ளார்.