கோப்புபடம் 
செய்திகள்

திருமருகல் அருகே, போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

திருமருகல் அருகே, போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

திட்டச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்து வரும் திருக்கண்ணபுரம் போலீசாரை கண்டித்து திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் பஸ் நிலையம் அருகில் திருமருகல் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த் ்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இளம்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளர் சிலம்பரசன், சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் துரை.வைரமுத்து, இஸ்லாமிய பேரவை உறுப்பினர் மஞ்சை ஹாஜா, வர்த்தகரணி தொகுதி செயலாளர் பரமேஸ்வரன், நளமகாராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். .இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை-நன்னிலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.