கைது 
செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தளவாப்பாளையம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தளவாப்பாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்த கார்த்திக்கேயன் (வயது 41) என்பவர் ஒரு ஓட்டலில் மது விற்றதாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.