கைது 
செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்:

தளவாப்பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மது விற்றுக் கொண்டிருந்த காதப்பாறை காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT