விபத்து 
செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

கரூர் மாவட்டம், மணவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

கரூர்:

கரூர் மாவட்டம், மணவாசி அருகே கோராக்குத்தியை சேர்ந்தவர் மணி. மகன் கார்த்திகேயன் (வயது 20). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கார்த்திகேயன் கோரகுத்தியிலிருந்து மணவாசிக்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.