பணம் பறிமுதல் 
செய்திகள்

வாணியம்பாடி அருகே தோல் வியாபாரியிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல்

வாணியம்பாடி அருகே தோல் வியாபாரியிடம் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி:

வாணியம்பாடி- தும்பேரி அண்ணாநகர் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

காரில் வந்தவர் தோல் வியாபாரி ரியாஸ் ரகுமான் என்பது தெரியவந்தது. அவர் எந்தவித ஆவணமுமின்றி ரூ.60 ஆயிரம் வைத்திருந்தார். அந்த பணத்தை நிலை கண்காணிப்புக்குழு வினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இடம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள், ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT