மேல்மலையனூர்:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு தாலுகா மேல்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கப்பெருமாள் (வயது 27), விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சேத்துபட்டில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல்மலையனூர் அடுத்த பெருவளூர் கூட்டு சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நரசிங்கப்பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் இறந்த நரசிங்கப்பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.