கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தை அடுத்த அழகுசேனை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பு (வயது 55). அதே ஊரைச் சேர்ந்த சிவகாமி (55), காவியா (13), ராணி (54), மல்லிகா (55), மகேஸ்வரி (55), உமா (36) ஆகியோர் சம்பவத்தன்று போளூர் ரெண்டேரிப்பட்டில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வேனில் சென்றனர். பின்னர் இரவு சுமார் 9.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
முனியந்தாங்கல் ஏரிக்கரை அருகே வந்தபோது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 7 பேரும் காயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து சுப்பு சந்தவாசல் போலீசில் புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.