தற்கொலை 
செய்திகள்

வல்லத்தில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

வல்லத்தில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சை அருகே உள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசெல்வம். இவருடைய மகன் மிலன்சுகுமாரன் (வயது 24).(பெயிண்டர்). இவருடைய மனைவி பவதாரிணி. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மிலன்சுகுமாரன் வல்லம் பஸ் நிலையம் அருகே உள்ள அய்யனார் கோவில் மண்டபத்தின் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் மிலன்சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.